☰
×

“சிறையில் வழங்கும் சப்பாத்தி சரியில்லை; 2-4 கிலோ உடல் எடை குறைந்தது”- அன்பில் மகேஷ்

 

 மற்ற கைதிகளை போல எனக்கும் சப்பாத்தி கொடுக்கின்றனர்.. என்னால் சாப்பிட முடியவில்லை என  கூறி அன்பில் மகேஷ் ஜாமீன் கேட்டார். 

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கட்சி நிதி என்ற பெயரில் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டார். காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவர், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில், அன்பில் மகேஷை காவலில் எடுக்கக் கோரிய மனுவி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது அன்பில் மகேஷ், "புழல் சிறையில் முறையான உணவு வழங்கப்படாததால் உடல் எடை குறைந்து விட்டது.  புழல் சிறையில் உணவு சரியாக இல்லாததால் 2-4 கிலோ உடல் எடை குறைந்துவிட்டது. சிறையில் வீட்டு உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மற்ற கைதிகளை போல எனக்கும் சப்பாத்தி கொடுக்கின்றனர்.. என்னால் சாப்பிட முடியவில்லை. தூங்கும் போது கூட விளக்கை எறிய விடுகின்றனர், மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கூட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளது. சிறையில் வழங்கும் சப்பாத்தி சரியில்லை" என்றார்.  இதனை அடுத்து தீர்ப்பு நவ.2-க்கு தள்ளிவைக்கப்பட்டது