×

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.2000 உதவித்தொகை - அடுத்த வாரம் மத்திய அரசு விடுவிப்பு..

 

3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2000 உதவித்தொகையை மத்திய அரசு அடுத்த வாரம் வழங்க திட்டமிட்டுள்ளது.  

"பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி" ( பிஎம் கிசான்) திட்டமானது 2018ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில்   2019 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ். சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின்கீழ் இணைந்த பயனாளிகளுக்கு 13 வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 13வது தவணை கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி பிரதமர் மோடி விடுவித்தார்.  

இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதால், பணம் முழுவதும் விவசாயிகளை சென்றடைகிறது.  . உதவித்தொகை பெற அலுவலகங்களுக்கு ஏறி, இறங்கவோ, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவோ வேண்டியதில்லை.. இதனால் இந்த திட்டம் விவசாயிகள், மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் 14-வது தொகை மே மாதம் இறுதியில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தொகையை பிரதமர் மோடி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் விடுவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.