×

சென்சார் போர்டும் மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது- மு.க.ஸ்டாலின்

 

CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டீ.ஆஷா இன்று மதியம் மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பும் முடிவு ஏற்கத்தக்கதல்ல, மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்து, ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்தார். அதனை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' (Jana Nayagan) திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இவ்வழக்கு மீதான விசாரணை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் வரும் 21 ஆம் தேதி வரை ஜனநாயகன் திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை.