☰
×

கீழே விழுந்த தொப்பி… முதலமைச்சர் விஜய் செய்த செயல்!

செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடந்தது. இதில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து, அவர்களுடன் ஒன்றாக குழு புகைப்படம் ஒன்றையும் எடுத்து கொண்டார். இதன்பின்பு முதல்-அமைச்சர் விஜய், உயரதிகாரிகள் உள்பட அனைவரும் எழுந்து புறப்பட தயாரானபோது, காவல் அதிகாரிகள் வணக்கம் செலுத்தினர். அப்போது ஒரு போலீஸ் அதிகாரியின் தொப்பி கீழே விழுந்து உருண்டோடியது.

அது முதலமைச்சர் விஜய்யின் கால் அருகே வந்து விழுந்தது. உடனே கீழே குனிந்து அதனை எடுத்து, அந்த அதிகாரியிடம் அவர் வழங்கி விட்டு சென்றார்.

கீழே விழுந்த தொப்பி… முதலமைச்சர் விஜய் செய்த செயல்! காவலரின் தொப்பி கீழே விழுந்ததை கவனித்த முதலமைச்சர் விஜய், உடனே அதை எடுத்து காவலரிடம் கொடுத்தார் #Vijay #TVK #Vandalur #Unamancheri #PoliceTraining #PoliceOfficers #PoliceParade #TamilNaduPolice #Chennai #TamilNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்

— Thanthi TV (@ThanthiTV) October 7, 2026