×

இன்னும் அழைப்பு வரவில்லை; ஆட்சி அமைக்க காத்திருக்கிறார் விஜய்..!

 

சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவருக்கு 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி, தலா 2 எம்எல்ஏக்களை கொண்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கடிதங்களை வழங்கியுள்ளன.

ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இன்னமும் கடிதம் வழங்கவில்லை.தனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை இன்று மூன்றாவது முறையாக கவர்னரை சந்தித்து விஜய் வழங்கினார். அவற்றின் அடிப்படையில் கவர்னர் மாளிகையில் இருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து விஜய் கட்சியினர் காத்திருக்கின்றனர். ஆனால் இப்போது வரை அழைப்பு வரவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு கடிதம் கையில் கிடைத்த பிறகு கவர்னர் இது பற்றி முடிவு எடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கவர்னர் மாளிகையில் இருந்து எப்போது அழைப்பு வரும், விஜய் எப்போது முதல்வராக பதவியேற்பார் என்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.