விஜய்யை பார்க்க சென்று மயங்கிய சிறுவர்கள்- மதுரையில் நடந்தது என்ன?
முதல்வர் நிகழ்ச்சியில்ஏ 3 மணி நேரமாக வெயிலில் நின்றதால் 15க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்றைய தினம் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் துவக்கி வைக்க வருகை தந்தார். இதனால் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான அக்கட்சியினை சேர்ந்த தொண்டர்கள் குவிந்திருந்தனர். கடுமையான வெயில் காரணம் மற்றும் மூன்று மணி நேரமாக அவர்கள் வெயிலில் பேரிக்காடுக்கு உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் தண்ணீர் இன்றி தவித்தனர்.
இறுதியில் முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு உள்ளே சென்றதும் 15க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயங்கி விழ தொடங்கினர். அவர்களை காவல்துறையினர் ஒவ்வொருவராக தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர் . பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர், மேலும் முதல்வர் காண்வாய் வாகனங்கள் அனைத்தும் சாலையின் நடுவே, மருத்துவமனை முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது . ஒரு வழியாக சிஎம் சென்ற பிறகு அனைவரும் பேரிகாட்டில் இருந்து ஏறி குதித்து தப்பித்து ஓடினர். அதன்பிறகு அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.