×

கே.என்.நேரு மீதான ஊழல் புகார் – லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்..!

 

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் நடந்த ஊழல் மற்றும் அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை சார்பில் இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆயிரத்து 20 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்துள்ளதாக ஆதார ஆவணங்களுடன் கடிதம் அனுப்பிய அமலாக்கத்துறை, முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் கடிதங்களின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.