×

அதிமுக உடைந்தது ; இபிஎஸ் உடன் 22 எம்எல்ஏ; வேலுமணியுடன் 25 எம்எல்ஏ!

 

அதிமுக இரண்டாக உடைந்தது என்பது நிரூபணமானது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேர் அரசை எதிர்த்தும், வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏ.,க்கள் 25 பேர் ஆதரித்தும் ஓட்டளித்தனர். 

நம்பிக்கை கோரும் தீர்மானத்தில்  தவெக-விற்கு ஆதரவாக 144 பேரும், எதிர்ப்பாக 22 பேரும், 5 பேர் நடுநிலை வகித்ததால், நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 116 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் அதிமுகவின் 25 உறுப்பினர்களுடன் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது.

அதிமுக வேலுமணி அணியில் யார் யார்?

1.எஸ்.பி.வேலுமணி, தொண்டாமுத்துார்

2.அரி, திருத்தணி

3.காமராஜ், நன்னிலம்

4.இசக்கி சுப்பையா, அம்பாசமுத்திரம்

5.சத்தியபாமா, தாராபுரம்

6.மரகதம் குமரவேல், மதுராந்தகம்

7.மரகதம் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி

8.லீமா ரோஸ், லால்குடி

9.சுகுமார், ஆற்காடு

10.கே.பி.அன்பழகன், பாலக்கோடு

11.சேகர், ப.வேலுார்

12.திலீபன், சங்கரன்கோவில்

13.நடராஜ், காங்கேயம்

14.விஸ்வநாதன், நத்தம்

15.மோகன், பண்ருட்டி

16.ரவி மனோகரன், பழநி

17.ராகேஷ், சங்கராபுரம்

18.எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர்

19.கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை

20.ஜெயக்குமார், பெருந்துறை

21.ஹரிபாஸ்கர், அந்தியூர்

22.சி.விஜயபாஸ்கர், விராலிமலை

23.அருண்மொழி தேவன், புவனகிரி

24.சி.வி.சண்முகம், மயிலம்

25.பாலகிருஷ்ணா ரெட்டி, ஓசூர்

அதிமுக இபிஎஸ் அணியில்

1.ராஜசேகர், செய்யூர்

2.வேலழகன், அணைக்கட்டு

3.கோவிந்தராசன், பர்கூர்

4.சம்பத்குமார், அரூர்

5.வேலு, செங்கம்

6.ராமச்சந்திரன், கீழ்பென்னாத்துார்

7.அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கலசப்பாக்கம்

8.ஜெயசுதா, ஆரணி

9.முக்கூர் சுப்பிரமணியன், செய்யாறு

10.பழனிசாமி, திருக்கோயிலுார்

11.நல்லதம்பி, கெங்கவல்லி

12.ஜெயசங்கரன், ஆத்துார்

13.உஷாராணி, ஏற்காடு

14.மணி, ஓமலுார்

15.வெங்கடாசலம், மேட்டூர்

16.இபிஎஸ்., எடப்பாடி

17.வெற்றிவேல், சங்ககிரி

18.கருப்பணன், பவானி

19.தாமரை ராஜேந்திரன், அரியலுார்

20.ராஜேந்திரன், நெய்வேலி

21.ஓ.எஸ்.மணியன், வேதாரண்யம்

22.தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி