×

ஏர்போர்ட்டில் அதிமுகவினர் செய்த செயல்- ஆடிப்போன அன்பில் மகேஷ்! 

 

திருச்சி விமான நிலையத்திற்குள் அமைச்சர் அன்பில் மகேஷ் வருகை தந்த போது முழக்கமிட்ட அதிமுகவினரை பார்த்து சிரித்து கொண்டே சென்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை வரவேற்பதற்காக  அதிமுகவினர் ஏராளமானோர் திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்பொழுது திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விமான நிலையம் வந்தார். அவர் விமான நிலையத்திற்குள் நுழைய சென்ற போது அங்கு கூடியிருந்த அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என முழக்கமிட்டனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை பார்த்து சிரித்து கொண்டே விமான நிலையத்திற்குள் சென்றார்.