×

முதலமைச்சர் விஜய்யை திரும்பி பார்க்க வைத்த MLA-வின் செயல்..!

 

சட்டப்பேரவையில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய விஜய் தாமு, “என்னை உருவாக்கிய என் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். எனக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டாலும், என் எளிய அடையாளமான ஆட்டோவில்தான் இப்போதும் சட்டமன்றத்திற்கு வருகிறேன்; இனிமேலும் ஆட்டோவிலேயே தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வருவேன்” என்று உறுதியளித்தார். இத்தலைசிறந்த உரையை அவையிலிருந்த முதலமைச்சர் விஜய் மற்றும் பிற உறுப்பினர்கள் புன்னகையுடனும் வியப்புடனும் கேட்டு ரசித்தனர்.

பணபலமும் அரசியல் பின்னணியும் கொண்ட பாரம்பரிய வேட்பாளர்களை வீழ்த்தி ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர் விஜய் தாமு. அடித்தட்டு மக்களின் குரலாகத் திகழும் தங்களைப் போன்றவர்களுக்குத் தொகுதிப் பணிகளைச் சிரமமின்றிச் செய்ய இந்த வாகன வசதி பேருதவியாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் தங்களின் எளிய பின்னணியையும் உழைப்பையும் என்றும் மறக்கப்போவதில்லை என்றும் அவர் உரையில் சுட்டிக்காட்டினார்.

எளிய மனிதர்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த அறிவிப்பும், அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் இடம்பெற்ற விஜய் தாமுவின் நெகிழ்ச்சியான உரையும் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான சேவையை ஆடம்பரமின்றி, நேர்மையுடன் முன்னெடுப்பதே தங்களின் முதன்மை இலக்கு என்பதைத் தவெக மக்கள் பிரதிநிதிகள் இதன்மூலம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர்.