ஏசி வேலை செய்யல.. சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திய பயணிகள்.. சென்ட்ரலில் பரபரப்பு..!!
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்பட்ட ‘சேரன் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் ஏ.சி. வேலை செய்யாததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் ரயிலை நிறுத்தியுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் ‘சேரன் எக்ஸ்பிரஸ்’ரயில் வழக்கம்போல் இரவு 10 மணிக்கு புறப்பட்டது. அப்போது குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் ஏசி வேலை செய்யவில்லை. இதனால் அவதிக்கு உள்ளான பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனடியாக தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் ரயில் நிறுத்தப்பட்ட 11வது நடைமேடைக்கு வந்தனர். அப்போது பயணிகள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் ஏ.சி. மெக்கானிக்குகளை வரவழைத்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி போர்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனர். ரயிலில் ஏற்பட்ட கோளாறுகள் சரிசெய்யப்பட்டு இரவு 10. 55 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. ஏ.சி வேலை செய்யாததால் அபாய சங்கிலியை பிடித்து இழுந்து பயணிகள் ரயிலை நிறுத்திய சம்பவம் சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.