3 பேர் சேர்ந்து செம அடி அடிச்சுட்டாங்க... - தூய்மை பணியாளரின் குமுறலை பகிர்ந்து தவெக அரசிடம் நீதி கேட்கும் நீலம் பண்பாட்டு மையம்!
Updated: May 23, 2026, 16:49 IST
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் வெளியான எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது
தூய்மைப்பணியாளருக்கு துணை நிற்போம்!
உடம்பு முடியலன்னு என்னோட லீவ நான் எடுத்தா காசு கேக்குறாங்க,காசு கொடுக்கலன்னு சொன்னதால
3 பேர் சேர்ந்து செம அடிச்சுட்டாங்க...தூய்மை பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய மேற்பார்வையாளர்களை வன்மையாக கண்டிப்போம்!
தமிழக அரசும் தமிழக முதல்வர் விஜயும் உடனடியாக தாக்குதல் நடத்திய மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடவும்,பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளருக்கு பாதுகாப்பை வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.