×

இன்று வெளியாகிறது +2 ரிசல்ட்; தேர்வு முடிவுகளை அறிய புதிய வசதி..!

 

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்து 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

வாட்ஸ்அப் செயலி வழியாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 7845252525 என்ற எண்ணுக்கு "Hi" என்ற பதிவிட்டடு, பின்னர் வரும் செய்தியில், துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தேர்வு செய்தால், தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி கேட்கும். அவற்றை பதிவு செய்தால், தேர்வு முடிவுகள் வெளியாகும்.

இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வாட்ஸ் அப் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.