×

தாயுமானவர் திட்டம் அப்டேட் : வீடு தேடி வரும் ரேஷன் பொருட்களின் தேதி அறிவிப்பு..!!

 

தாயுமானவர் திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாதந்தோறும் முதல் வாரங்களில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு சென்றே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  

 

மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் எப்போது விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.

 

ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்த தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தின் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர். பெரம்பூர். ஆர்.கே.நகர். இராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம். ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர். சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.