☰
×

135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை வீட்டில் பதுக்கிய தவெக நிர்வாகி

 

நாகை தவெக நிர்வாகி வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை தவெக நிர்வாகி வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 8 மணி நேர சோதனைக்குப் பிறகு தவெக நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் இருவரும் கைது செய்யப்பட்டனர். சர்வதேச போதைப் பொருளான மெத்தம்பெட்டமைன் கடத்தல் குற்றச்சாட்டில் தவெக மாவட்ட நிர்வாகி வீட்டில், டெல்லியில் இருந்து வந்துள்ள வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். இலங்கையில் இருந்து மெத்தம்பெட்டமைன் கடத்திய குற்றச்சாட்டில், நாகை தவெக மாவட்ட நிர்வாகி பூபாலன் வீட்டில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். டெல்லியில் இருந்து வந்துள்ள அதிகாரிகள், தவெக செயற்குழு உறுப்பினரான பூபாலனின் கீழையூர் அருகே சிந்தாமணியில் உள்ள வீடு, நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடத்துகின்றனர்.