தந்தை பெரியார் புத்தக வெளியீட்டு விழா.. தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறாரா..?
Aug 27, 2025, 06:00 IST
தவெக தலைவர் விஜய் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த சூழலில், அடுத்ததாக விகடன் குழுமம் சார்பில் சென்னையில் அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ள தந்தை பெரியார் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்தடுத்து விஜய் பொதுவெளியில் வருவது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழலில், நடிகர் விஜய் அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்க தொடங்கிவிட்டதாக அக்கட்சியினர் குதூகலம் அடைந்துள்ளனர்.