கருத்துக் கணிப்பை ஒழித்துக் கட்ட சட்டத்தில் இடமில்லையா? - தங்கர்பச்சான்
எல்லாவற்றையும் பணமாக்கத் துடிக்கும் இப்படிப்பட்ட கூட்டத்திடமிருந்து மக்கள் தப்பவே முடியாதா? என இயக்குநர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏப்ரல் 29 மாலை வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை கடந்த புதன்கிழமை மாலை முடிவுக்கு வந்ததையடுத்து, தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தேர்தலுக்குப் பின்னர் நடத்திய கருத்துக்கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. ஆக்சிஸ், சாணக்கியா, என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ், ரிபப்ளிக் டிவி-பி மார்க், மேட்ரிஸ், டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்களும் தனியார் நிறுவனங்களும் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் பெரும்பாலும் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துள்ளன. திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என அவை கணித்துள்ளதால் அக்கட்சியினர் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. அதேசமயம் சமூக வலைதளங்களில் தவெகவே வெற்றி பெறும் என நெட்டிசன்கள் ஆருடம் செய்துவருகின்றனர்.