“குதிரை பேரமல்ல, யானை பேரம்! திமுகவை தனிமையாக்கி, அதிமுகவை பலவீனமாக்கும் செயல்”- தமிமுன் அன்சாரி
திமுகவை தனிமையாக்கி, அதிமுகவை பலவீனமாக்கும் செயலை தமிழக வெற்றி கழகம் யானை பேரதத்தில் ஈடுபட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டியளித்துள்ளார்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சிதம்பரம் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனது தொகுதி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர்,மாற்று அரசியல் மற்றும் தூய அரசியல் என கூறுபவர்கள் தற்போது குதிரை பேரம் மட்டுமின்றி யானை பேரம் மற்றும் இமாலய பேர அரசியல் நடத்தி வருகிறார்கள் என குற்றம்சாட்டினார். தமிழகத்தில் திராவிட கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும், அதிமுகவை பலவீனப்படுத்தி திமுகவையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் நடக்கின்றன என்றும் அவர் கூறினார். திமுக யானை போன்றது, படுத்தாலும் குதிரை உயரம் என்றும் அதிமுக தற்போது வலுவான தலைமை இல்லாததால் சிக்கலில் உள்ளது என்றும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைமை இன்மையே அதற்குக் காரணம் என்றும் கூறினார்.