×

கமல் தயாரிக்க, ரஜினி நடிக்க, சுந்தர்.சி இயக்க... செம கூட்டணி

 

கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் Thalaivar173 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனை அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம்,  Happiness unlimited எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் 
கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், “அன்புடை ரஜினி, காற்றாய் அலைந்த நம்மை இறக்கி இறுக்கி தனதாக்கியது சிகரத்தின் இரு பனிப்பாறைகள் உருகிவழிந்து இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம். நம் அன்புடை நெஞ்சார நமைக் காத்த செம்புலம் நனைக்க நாழும் பொழிவோம், மகிழ்வோம்! வாழ்க நாம் பிறந்த கலைமண்” எனக் குறிப்பிட்டுள்ளார்.