×

ஜெம் தொடர்புடைய இடங்களில் சோதனை

 

ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடடததிவருகின்றனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள ஜெம் அலுவலங்களிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.  பாலியல் வழக்கில் கைதான ஜெம் வீரமணிக்கு தொடர்புடைய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்சோ வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க பல கோடி ரூபாய் செட்டில்மெண்ட் செய்ததாக புகார் எழுந்த நிலையில், அதிரடி சோதனை நடைபெற்றுவருகிறது.