×

திருச்சியில் பயங்கரம்..! தோழியை பார்க்கச் சென்ற 14 வயது சிறுமியை தனியே அழைத்து பாலியல் தொல்லை..!

 

திருச்சியில் 14 வயது சிறுமி ஒருவர் தனது தோழியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.அந்தத் தோழியின் தாயார் அவசர வேலை காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனியார் வாடகை கார் (Travels Car) ஒன்றை வரவழைத்துள்ளார்.அந்த காரை ஓட்டி வந்த ஓட்டுநர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த மாரிசெல்வன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீட்டிற்கு கார் வந்திருந்த சமயத்தில், அங்கு நின்றுகொண்டிருந்த 14 வயது சிறுமியிடம் ஓட்டுநர் மாரிசெல்வன் தனியாகப் பேசி, நயமாக வார்த்தைகள் கூறி அவரை தனியே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

 சிறுமியை தனியே அழைத்துச் சென்று, மது ஊற்றிக் கொடுத்துப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இந்நிலையில், அந்தச் சிறுமி மது போதையில் சுயநினைவின்றி கீரைக்கடை பகுதியில் கிடந்துள்ளார். சிறுமிக்கு நேர்ந்ததை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்ட கார் ஓட்டுநர் மாரிசெல்வனை (43) சரமாரியாக தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.