×

திருவண்ணாமலையில் பயங்கரம்! பெண்ணை அரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கும்பல்!

 

திருவண்ணாமலை அய்யம்பாளையம் ஏரிக்கரையில் கடந்த மே 31, 2026 அன்று ஆண் நண்பருடன் பெண் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் அந்த பெண்ணை மிரட்டி செல்போன், நகை போன்ற பறித்துக்கொண்டு அந்தப் பெண்ணை அரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 7 பேரை அழைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் வாசுதேவன், சிவப்பிரகாசம், டேனியல் இசக்கி உள்ளிட்ட 7 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இதுபோன்று பல பெண்களிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தற்போது வாசுதேவன் மட்டும் கைது செய்யப்பட்டு மற்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை கண்டித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மேடைகளில் மகளிர் உரிமை குறித்தும், புதியதொரு மாற்றம் குறித்தும் வாய்ஜாலம் காட்டி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, இன்று முந்தைய திமுக அரசை போலவே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி முழுமையாக முடங்கி கிடக்கிறது. மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதை பகுதியிலேயே 10 பேர் கொண்ட கும்பல் இத்தகைய துணிகரமான குற்றத்தில் ஈடுபடுகிறது என்றால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் கொண்ட கும்பலில் தற்போது பிடிபட்டுள்ளவர்கள் மட்டுமின்றி, தலைமறைவாக உள்ள மற்ற அனைவரையும் உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

புனித பூமியான திருவண்ணாமலையில் பெண்ணுக்கு எதிராக அரங்கேறிய கொடூரம்: பெண்களின் பாதுகாப்பைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசுக்குக் கண்டனம்!

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள ஏரிக்கரையில் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்து, நகை பறிப்பு செய்ததோடு, அவரை அரைநிர்வாணப்படுத்தி…

— Nainar Nagenthran (@NainarBJP) June 2, 2026