×

மதுரையில் பயங்கரம்..! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை! 

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின்போது 17 வயது சிறுவன் குபேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டபோது காயம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த முத்துமணி குபேந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங் அருகே நின்று கொண்டிருந்த குபேந்திரனை, 2 இருசக்கர வாகனங்களில் வந்த முத்துமணி மற்றும் அவரது தம்பி ராஜ் உள்ளிட்டோர் விரட்டி சென்று கத்தியால் தாக்கியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த சிறுவன் குபேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.