×

சென்னையில் பயங்கரம் : உணவு டெலிவரி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்..!

 

சென்னை வேளச்சேரி நேரு நகரில் உள்ள ஏ.எல்.முதலியார் தெருவில் உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞர் ஒருவரை, இரண்டு பேர் சேர்ந்து பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அதனை வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைத்தளத்திலும் ரீல்ஸாக பதிவிட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை, கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெட்டுப்பட்டவர் எழுந்து ஓட முடியாமல், படுத்தவாறே தனது கைகளால் தற்காத்துக் கொள்ள முயற்சித்தும், தொடர்ந்து பலமுறை அவரை அந்த கும்பல் வெட்டியுள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலர், கற்களை வீசியும், காலணியை வீசியும் அந்த இளைஞரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, வேளச்சேரி காவல் நிலைத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடம் விரைந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து இளைஞரை தாக்கி நபர்கள் யார், எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்ற கோணங்களில் விசாரணை நடத்தினர்.

மேலும், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய இளைஞரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.