×

கொடைக்கானலில் கூடார வீடுகளுக்கு தடை

 

கொடைக்கான‌லில் நிர‌ந்தர‌ க‌ட்டட‌ அமைப்பு இல்லாமல் கூடார‌ம் அமைத்து த‌ங்கும் டென்ட் ஹவுஸ், கன்டெய்னர் ஹவுஸ்களில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க அரசு தடை விதித்துள்ளது

இயற்கை எழில் கொஞ்சம் கொடைக்கானலை ரசிக்க வருபவர்களை குறிவைத்து, புது விதமாக டென்ட் ஹவுஸ் எனப்படும் கூடார வீடுகள் அமைத்து வாடகைக்கு விடும் கலாசாரம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் நில உரிமையாளர்களும், சுறறுலா ஏற்பாட்டாளர்களும் சேர்ந்து தற்காலிக கூடாரங்கள் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்து பல ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூலிக்கின்றனர். 


கொடைக்கானல் மலைப்பகுதியில் டெண்ட் அமைக்க தடை உள்ள சூழலில், அதை கண்டுகொள்ளாமல் சமூக வலைதளங்களில் செய்யப்படும் விளம்பரங்களை பார்த்துவிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதில் தங்குகின்றனர். வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் கூடாரங்களில் தங்கும் சுற்றுலாப் பயணிகளை வனவிலங்குகள் தாக்கும் ஆபத்து உள்ளது. இதனால் தற்காலிக டென்ட் ஹவுஸ் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அரசின் தடையை மீறி டென்ட் ஹவுஸ் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்தால் நில உரிமையாளர்கள், டெண்ட் அமைப்பவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.