☰
×

#BREAKING திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல்

 

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனால் அடிவாரத்தில் போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் குதித்த இந்து அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.