விஜய்யின் படத்துடன் தங்க நாணயங்கள்! அண்ணன் சீருக்கு டெண்டர் வெளியிடூ
தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டத்திற்காக 60,000 தங்க நாணயங்களுக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்க, 60,000 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. ஒவ்வொரு நாணயத்தையும் 8 கிராம் எடையில், 22 கேரட் தங்கத்தில் தயாரிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தமிழக அரசு சின்னம், மறுபக்கம் முதலமைச்சர் விஜயின் படத்துடன் கூடிய தங்க நாணயம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயங்களை வழங்கும் வகையில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. (916) BIS HALLMARK முத்துரையுடன் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணன் சீர் திட்ட தங்க நாணயங்கள் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் கருவூலங்களுக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் பதிவு செய்த நிறுவனமாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் வேண்டும் என டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.