☰
×

மேலும் 7 ஆயிரம் மெகாவாட் மின்சார கொள்முதலுக்கு டெண்டர் - மின் பகிர்மான கழகம்

 

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) SHORT TERM POWER PURCHASE என்ற பெயரில் 7 மாதங்களுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க டெண்டர் விட்டுள்ளது.

தமிழகத்தில் மாலை நேர மின் தேவை தான் மிகப்பெரிய சவால். இதனால் தான் பகலில் இல்லாமல், இரவில் மட்டும் மின்சாரம் வாங்க திட்டமிட்டுள்ளது.

- *நேரம்: தினமும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை (18:00 to 24:00 Hrs)
- *அளவு: 1000 MW
- *இடம்: TN State Periphery-யில் டெலிவரி*

1.  01.11.2026 முதல் 30.11.2026 வரை - 1000 MW
2.  01.12.2026 முதல் 31.12.2026 வரை - 1000 MW
3.  01.01.2027 முதல் 31.01.2027 வரை - 1000 MW
4.  01.02.2027 முதல் 28.02.2027 வரை - 1000 MW
5.  01.03.2027 முதல் 31.03.2027 வரை - 1000 MW
6.  01.04.2027 முதல் 30.04.2027 வரை - 1000 MW
7.  01.05.2027 முதல் 31.05.2027 வரை - 1000 MW

தமிழ்நாட்டின் மின் தேவை இந்த ஆண்டு 20,000 முதல் 22,000 மெகாவாட்டை தாண்டி சாதனை படைத்துள்ளது. பகலில் சோலார் மின்சாரம் கை கொடுத்தாலும், மாலை 6 மணிக்கு மேல் சோலார் உற்பத்தி பூஜ்யமாகி விடும். அதே நேரத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் லைட், ஏசி, மோட்டார் லோடு ஒரே நேரத்தில் அதிகரிப்பதால், மாலை நேர பீக் தான் TNPDCL-க்கு பெரும் சவால்.நவம்பர் முதல் பிப்ரவரி வரை காற்றாலை மின் உற்பத்தி மிக குறைவு. மார்ச் முதல் மே வரை கோடை வெயில் காரணமாக ஏசி பயன்பாடு 40% அதிகரிக்கும். எனவே நவம்பர் முதல் மே வரை தொடர்ச்சியாக மின் தட்டுப்பாடு வராமல் இருக்கவே இந்த 7 மாத முன்கூட்டியே திட்டமிடல்.

அக்டோபர் 15 முதல் டிசம்பர் 31 வரை கொட்டி தீர்க்கும் வடகிழக்கு பருவமழையால் நிலக்கரி விநியோகம், அனல் மின் நிலைய உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதே போல் தாமிரபரணி, டெல்டா பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மின் கட்டமைப்புகள் பாதிக்கப்படும். அதையும் கணக்கில் கொண்டு தான் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் இறக்குமதி செய்யும் திட்டம். தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு "மின் தடையில்லா தமிழகம்" என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த காலங்களில் மாலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகளுக்கு மின் தடை வந்தது. அதை தவிர்க்கவே இப்போதே 1000 MW-க்கு டெண்டர்.
இந்த டெண்டர் மூலம் வெளி மாநில தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படும். ஒரு யூனிட் 6 முதல் 9 ரூபாய் வரை விலை போக வாய்ப்புள்ளதால், 7 மாதத்திற்கு அரசுக்கு சுமார் 2000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.