#BREAKING சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய டெண்டர் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நிகழ்வுகளை மல்டி-கேமரா செட்-அப் மூலம் முழுமையாகப் படம்பிடித்து, தொலைக்காட்சிகளுக்கு உடனுக்குடன் நேரலை வழங்குவதற்கான பணிகளுக்குச் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை (DIPR) புதிய இ-டெண்டர் கோரியுள்ளது.
சட்டமன்ற நடவடிக்கைகளை முழுமையாக கவரேஜ் செய்து, செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கோரி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை அறிவிகக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் ஜனவரி 2027 முதல் டிசம்பர் 2028 வரை மல்டி கேமரா செட் - அப் மூலம் முழுமையாக கவரேஜ் செய்யப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் பயணிகளுடன் செயற்கைகோள் தொலைக்காட்சி சேனல்களில் உடனடி ஒளிபரப்புக்கு வழங்கப்பட வேண்டும் என டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 160 நாட்கள் கவரேஜ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் 80 நாட்கள் கவரேஜ் செய்ய திட்டமிட்டுள்ளது. விஜயின் ரீல்ஸ் பேச்சையும், தவெக எம். எல். ஏக்களின் வெற்றுப் புகழ்ச்சியையும் ஒளிபரப்பு செய்ய தனியாருக்கு டெண்டரா என விமர்சகர்கள் கேள்வி எழுப்பிக்கின்றனர்.