×

கெளத்தூரில் 412 வாக்குகளுக்கு பிறகு விவிபேட் இயந்திரத்தில் டெக்னிக்கல் பழுது- மாநகராட்சி ஆணையர் பரபரப்பு

 

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சமீரன், “இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களின் செயல்பாட்டினை சரிபார்த்தல் பணி (EVM Checking & Verification process) 29.07.2026 முதல் நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது நாளாக இன்றும் (31.07.2026) இரண்டு வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டினை சரிபார்க்கும் பணியானது  நடைபெற்றன. வேட்பாளர்கள் வாரியாக பதிவான வாக்குகளும் சரிபார்க்கப்பட்டன. வாக்கு இயந்திரங்களில் சிலிப்பில் எழுதப்பட்டிருந்தது சரியாக இல்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. வாக்கு இயந்திரத்தை திறந்து பார்த்து அதன் எண்ணை சரி பார்த்துக் கொள்ளலாம். கொளத்தூர் சென்னை மாநகராட்சி பள்ளியில் பதிவான வாக்குகளில் 412 வாக்குகள் சரியாக பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு பதிவான வாக்குகளுக்கு விவிபேட் இயந்திரத்தில் லைட் எரியவில்லை. டெக்னிக்கல் பழுது ஏற்பட்டுள்ளது. திமுகவின் புகார்களுக்கு உரிய விளக்கம் தரப்பட்டுள்ளது.வேட்பாளர்கள் வாரியாக பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டது. EVM, விவிபேட் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. EVM இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதரமும் இல்லை.” என்றார்.