×

#BREAKING ஆசிரியர்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம்

 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர் இயக்கத்தினர் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 1560 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதேபோல நேற்று சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 1400 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். மூன்றாவது நாளாக இன்று சென்னை பாரிமுனை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தால் பாரிமுனை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.