☰
×

‘தரமான உணவு’ என்று ஆசிரியர்கள் பரிசோதனை செய்த பிறகு மாணவர்களுக்கு வழங்க அறிவுரை

 

அரசு பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை Elementary Education இயக்குநர் பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கு சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. Elementary Education இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரத்தை விநியோகிக்கும் முன் பரிசோதித்து உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சமைத்த உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்னர் உடல் நலத்திற்கு உகந்த தரமான உணவு தான் என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்த பிறகு மாணவர்களுக்கு பரிமாற வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறுவதை தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். சமையலறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று தொடக்கப் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

  • சமையலறையில் சமையல் செய்யும் பொருட்கள் தவிர பிற பொருட்கள் வைப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
  • சமையலறை புகை, தூசி, நூலாம்படை இல்லாமல் தூய்மையாக எப்போதும் பராமரிக்கப்பட்டு வர வேண்டும்.
  • சமையல் செய்யும் பாத்திரங்கள் மற்றும் பரிமாறும் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் நன்கு சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.
  • சமைத்த உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்னர் அவ்வுணவு அவர்களின் உடல்நலத்திற்கு உகந்த தரமான உணவு தான் என்பதை ஆசிரியர்கள் உறுதிசெய்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
  • சமையல் செய்த பின்னர் பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை முழுமையாக மூடி வைத்து, தேவைப்படும்போது மட்டும் திறந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
  • சமையல் செய்யும் போதும், சமைத்த பின்னர் பரிமாறுவதற்கு பிற பாத்திரங்களில் உணவை மாற்றிய பின்பும், மூடி வைத்த நிலையில் பாதுக்காப்புடன் இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
  • மாணவர்களுக்கு உணவு பரிமாறுதல் பணியை தினமும் பள்ளியின் தலைமை ஆசிரியர் / ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வர வேண்டும்.