ஆசிரியர் பணியிடமாற்றம் - மாணவர்கள் பாச போராட்டம்
சோளிங்கர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம் ரத்து செய்யக்கோரி மாணவர்கள் பள்ளியின் நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த அரசு பேருந்தும் சிறைபிடிக்கப்பட்டது.
சோளிங்கர் அருகே உள்ள பழைய பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியராக குமார் பணியாற்றி வருகிறார். இவர் பணி மாறுதல் பெற்று அருகே உள்ள செங்கல் நத்தம் அரசு பள்ளிக்கு மாறுதல் ஆகி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்கள் பள்ளி புறக்கணித்து பள்ளியின் நுழைவாயில் முன்பே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த அரசு பேருந்து சிறப்பிடித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் குமார் பள்ளி மாணவர்களை சமாதானப்படுத்தி வகுப்பறைக்குள் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
குமார் பேசி முடித்து விரைவில் இப்பள்ளியில் பணி மாறுதல் பெற்று வருவதாக மாணவர்களிடம் தெரிவிக்கையில் மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதனர். இதைக் கண்ட ஆசிரியர் குமாரும் கண்ணீர் விட்டு பள்ளியில் இருந்து விடைபெற்றார். இந்த பாச போராட்டம் கிராமப்புற பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.