×

#BREAKING டீ, காபி விலை அதிகரிக்க வாய்ப்பு!

 

சர்க்கரை விலை உயர்வு காரணமாக டீ, காபி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சர்க்கரை விலை ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.25 வரை உயர்ந்துள்ளது. 50 கிலோ வெள்ளை சர்க்கரை மூட்டை ரூ.2,150-ல் இருந்து ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 
சில்லறை வர்த்தகத்தில் சர்க்கரை விலை ஒரு கிலோ ரூ.44-ல் இருந்து ரூ. 68 ஆக அதிகரித்துள்ளது. வெல்லம் ரூ.55-ல் இருந்து ரூ.80 ஆகவும், நாட்டு சர்க்கரை ரூ.55-ல் இருந்து ரூ.70 ஆகவும் அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி குறைவு, பருவநிலை பாதிப்பு, பண்டிகை கால தேவை, உலகளாவிய பற்றாக்குறை, பதுக்கல் ஆகியவற்றால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சர்க்கரை விலை உயர்வால் தேநீர், காபி, இனிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், சர்க்கரையின் சில்லறை மற்றும் மொத்த விலைகள் சுமார் 40% உயர்ந்துள்ளன. சில மாநிலங்களில் இது 50% வரை கூட அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற எட்டு மாநிலங்களில், ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ.65-ஐத் தாண்டியுள்ளது. ஆகஸ்ட் 23 நிலவரப்படி, ஒடிசாவில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ.67 க்கு விற்கப்படுகிறது.