×

ஊரடங்கு: டாஸ்மாக்கிற்கும் லீவு விட்ட தமிழக அரசு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,91,451 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வரும் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில்
 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,91,451 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வரும் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் முதல் இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின்போது, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளில் முழு ஊரடங்கு இல்லை. அன்றைய தினம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது. டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படாததற்கு கண்டனம் எழுந்த நிலையில் தற்போது தமிழக அரசு அவசர அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.