×

முழு ஊரடங்கு எதிரொலி : டாஸ்மாக் கடைகள் நாளை  இயங்காது  என அறிவிப்பு!!

 

முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை செயல்படாது என்று  டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 10-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு கூடிய நடைமுறையில் இருந்து வருகிறது.  இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த தவறினால் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் அளித்த பரிந்துரையின் படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழ்நாடு நோய் தொற்றுகளை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும்,  பரவிவரும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் பொது மக்கள் நலன் கருதியும்,  கடந்த 6ம் தேதி முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் 9ம் தேதியான நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இருப்பினும் அத்தியாவசிய பணிகளான மருத்துவமனைகள் மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு முழு ஊரடங்கின்  போது பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும்.  உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் இந்த நேரத்தில் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இம்மாதம் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம்,  18ஆம் தேதி  வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26ஆம் தேதி குடியரசு தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.