இன்று டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் இயங்காது..!!
Feb 9, 2026, 05:35 IST
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. தினமும் 100 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகிறது. அதுவும் வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை தினங்களில் வருமானங்கள் இரட்டிப்பாகும்.
இந்நிலையில்,9ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் அதாவது பிற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி 3 மணி நேர கடையடைப்பு நடத்தப்படுகிறது.