4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..!!
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களை 4 நாட்களுக்கு மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாளை (அக்.4) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான அக்.6-ம் தேதி நள்ளிரவு வரையிலும், வாக்கு எண்ணிக்கையான அக்.9-ம் தேதியும் அனைத்து மதுபான கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருக்கும். அசம்பாவிதங்களை தவிர்க்கவும், தேர்தல் நியாயமாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், அவற்றை சார்ந்த மதுக்கூடங்கள் மற்றும் மதுபான உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும், வரும் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையும், ஓட்டு எண்ணிக்கை நாளான 9 ஆம் தேதியும் மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.