தமிழ்நாடு முழுவதும் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள்- அரசின் முடிவுக்கு எதிராக களமிறங்கிய ஊழியர்கள்!
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பல கடைகள் இன்று திறக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலி பாட்டில் வாங்கும் புதிய ஸ்கேனிங் நடைமுறையை கைவிடக் கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியாளர்கள் போராட்டம் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாட்டில்களை திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் முழுமையாக நிறுவப்படும் வரை காலி பாட்டில்களை எண்ணுவதும், அவற்றைப் பாதுகாப்பதும் சாத்தியமற்றது எனக் கூறி ஊழியர்கள் கூறுகின்றனர்.
சென்னை, திருவள்ளூர், நெல்லை, தென்காசி, மதுரை, கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி சுமையை திணிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.