×

சென்னை அருகே டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல்- மதுப்பிரியர்கள் அவதி

 

கூடுதல் விலைக்கு மது விற்றதாக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், இதனை கண்டித்து சென்னை புறநகர் பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை ஊழியர்கள் மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்த புகாரில் நேற்று 67 பேரும், இன்று 150 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணியிடை நீக்க அறிவிப்பை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளதால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஏற்படும் செலவினத்தை ஏற்க வலியுறுத்தியுள்ள டாஸ்மாக் ஊழியர்கள், காலி பாட்டில்திரும்ப பெறும் திட்டத்திலும் தங்கள் சொந்த காசை செலவிட வேண்டியிருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.