×

டாஸ்மாக் முறைகேடு- செந்தில்பாலாஜி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

 

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி விசாகன் ஐஏஎஸ், முன்னாள் மண்டல மேலாளர் ராம துரைமுருகன், செந்தில் பாலாஜி, முன்னாள் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ரத்தீஷ் ராஜ், மூலனூர் கார்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பார் ஓனர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகாரிகளுடன் சேர்ந்து ரூ.17.27 கோடி முறைகேடு செய்ததாகவும், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், கரூரில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகவும்  FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.