டாஸ்மாக் முறைகேடு-ரத்தீஷ் குடும்பத்தினர் ஆஜராக சம்மன்
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ரத்தீஷ் தலைமுறைவாக உள்ளதால் அவருடைய குடும்பத்தினர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், பார் உரிமம் வழங்குதல் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவற்றில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை (ED) மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரணை நடத்தி வருகின்றன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி, உதயநிதியின் நண்பன் ரத்தீஷ், மதுபான வகைகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் பார் டெண்டர்களில் அதிகார மையமாகச் செயல்பட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக கடந்த 2025-ம் ஆண்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவருடைய குடும்பத்தினர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.