×

ரூ.50,845 கோடி வருவாய் ஈட்டிய டாஸ்மாக்

 

2025–26 ஆம் ஆண்டில் டாஸ்மாக் ரூ.50,845 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.


நடப்பு நிதியாண்டில், ஜூலை மாதம் வரை டாஸ்மாக் ரூ.17,854 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு ரூ.56,000 கோடி வரை வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி சராசரியாக ரூ.100 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டாஸ்மாக் நிர்வாகத்தில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வரை கூடுதல் வருவாய் ஈட்டப்படவுள்ளது. கடைகளின் வசதிகளை மேம்படுத்துதல், வெளிநாட்டு மற்றும் உயர்தர மதுபான பிராண்டுகளை அறிமுகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் விற்பனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதாவது மூடப்பட்ட கடைகளால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, எலைட் (Elite) கடைகளில் உலகளாவிய மற்றும் வெளிநாட்டு மதுபான பிராண்டுகளை அறிமுகம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது. முறைகேடுகளைத் தவிர்க்கவும் விற்பனையை முறைப்படுத்தவும் ஆன்லைன் ஆர்டர் (Digital Indent System) போன்ற கணினிமயமாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்படுகின்றன.