மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி: பண்டிகை நாட்களில் 2 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை?
Nov 12, 2026, 11:35 IST
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது.
இந்த கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி ஆகிய எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பண்டிகை நாட்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்க, மது கடைகளுக்கு, பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாளிலும் விடுமுறை அளிக்க, முடிவு செய்யப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.