×

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்-  நாளை முதல் கடைகள் திறக்கப்படும்

 

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாளை முதல் வழக்கம் போல் கடைகள் திறக்கப்படும். 

அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்து தருவது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காலி பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் மாற்று ஊழியர்கள் மூலம் பெறுவதற்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்ததை தொடர்ந்து கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நாளை முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 197 கடைகளும் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கொடுத்துள்ள கால அவகாசத்திற்குள் முடிக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டு குழு கூடி முடிவு செய்யும் எனவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தஞ்சையிஉம் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.