×

முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள ஜூலை மாத ஞாயிற்றுகிழமைகளில் டாஸ்மாக் மூடல்!

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5-7-2020, 12-7-2020, 19-7-2020 மற்றும் 26-7-2020 ஆகிய தேதிகளில் எதவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று உச்சத்திலுள்ளது. முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட
 

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5-7-2020, 12-7-2020, 19-7-2020 மற்றும் 26-7-2020 ஆகிய தேதிகளில் எதவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் கொரோனா தொற்று உச்சத்திலுள்ளது. முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள ஜூலை மாத ஞாயிற்றுகிழமைகளில் தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.