×

#BREAKING மதுப்பிரியர்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் சரக்கு ரூ.10 குறைகிறது

 

24 ஆயிரம் டாஸ்மார்க் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்கத் தலைவர் பழனி பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் பணியாளர் சங்கத் தலைவர் பழனி பாரதி, “அமைச்சரிடம் டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கான காரணங்களை விளக்கினோம். சரக்கு இறக்கு கூலி, பாட்டில் உடைப்பு இழப்பு, காலி பாட்டில் கையாளும் செலவு மற்றும் இரவு நேரக் காவல் செலவு போன்ற நிர்வாக செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இந்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மாநிலம் முழுவதும் உள்ள 4,200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 24 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் வரவேற்போம் என்ற அவர், பல ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசுத்துறையில் மாற்றுப் பணி வழங்க வேண்டும். மேலும், தற்போதைய ஆட்சியில் ஊதிய உயர்வு மற்றும் ஈஎஸ்ஐ வழங்கிய அரசுக்கு அவர் நன்றி. டாஸ்மாக் கடைகளில் இனி MRP-யை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்ற அரசின் அறிவுறுத்தலை முழுமையாக ஏற்றுகொள்கிறோம். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளும் MRP விலைக்கே மது விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம். கூடுதல் கட்டணத்தில் மது விற்கமாட்டோம்” என்றார். இதன்மூலம் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக கூறும் மதுப்பிரியர்களின் குமுறல்களுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.