டேங்கர் லாரி விபத்து; சாலையில் ஆறாக ஓடிய பாலை கேன்களில் பிடித்த மக்கள்..!!
டில்லி-ஜெய்பூர் நெடுஞ்சாலையில் பால் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக லாரி விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.
இதனால், லாரி டேங்கில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் பால் சாலையில் கொட்டியது. ஆறாக ஓடிய பாலைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
தங்கள் கைகளில் கிடைத்த பாட்டில்கள், கேன்களில் பாலை பிடித்து வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
பொதுமக்களை அப்புறப்படுத்தி, லாரியை மீட்கும் பணியில் இறங்கினர். பால் லாரி விபத்தில் சிக்கியதை அறிந்த அண்டை கிராம மக்களும் அங்கு திரண்டு வந்து பாலை கொண்டு சென்றனர்.
இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி உண்டானது.