வெல்டிங் பணியின் போது வெடித்துச் சிதறிய டேங்கர் லாரி..!
வெல்டிங் கடையில் இருந்த காலியான பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், அருகிலிருந்த கடைகள் பலத்த சேதமடைந்தன. டேங்கரில் எரிபொருள் இல்லாததால் பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் பரபரப்பான சாலையில் டேங்கர் லாரி ஒன்று பழுதாகி நின்றது. அதை வெல்டிங் வைத்து பழுது பார்க்கும் பணியில் இரண்டு ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு ஊழியர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சாலையில் சென்றவர்கள் இதனால் ஏற்பட்ட பயங்கர சத்தத்தில் பயந்து ஓடினர். அதேபோல சாலையின் ஓரத்தில் இருந்து இரண்டு கடைகள் இந்த சம்பவத்தால் முற்றிலும் சேதம் அடைந்தது. காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.