×

 டான்செட் நுழைவுத் தேர்வு எப்போது?  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

 

அண்ணா பல்கலைக்கழகம் டான்செட் நுழைவுத் தேர்வு தேதிகளை வெளியிட்டது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்,  தனியார் கல்லூரிகளில் முதுநிலை பொறியியல்  மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொதுத்துறை தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வினை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது . அந்த வகையில் வரும் 2023ம் ஆண்டுக்கான டான்செட்  தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.  அதன்படி அடுத்த ஆண்டுக்கான டான்செட் நுழைவு தேர்வு வருகிற பிப்ரவரி 25 மற்றும் 26ம் செய்திகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிப்ரவரி 25ஆம் தேதி காலை எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்டெக் ,எம்இ, எம்ஆர்க்  படிப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. எம்.பி.ஏ படிப்புக்கு பிப்ரவரி 26ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப தேதிகளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. விண்ணப்பம் , தேர்வு கட்டணம் உள்ளிட்டவை தொடர்பான கூடுதல் தகவல்கள்   www.annauniv.edu  என்ற இணையதளத்தில் அறிவிப்புக்கள் வெளியிடப்படும் என்றும்,  இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் 044-22358289 / 22358314 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.